சிறுவாணி அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு


சிறுவாணி அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 9 July 2023 2:15 AM IST (Updated: 9 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்து உள்ளது.

கோயம்புத்தூர்
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்து உள்ளது.


சிறுவாணி அணை


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் 45 அடி வரையே தண்ணீரை தேக்கி வைக்க கேரள அரசு அனுமதித்து வருகிறது.


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட் டம் வேகமாக குறைந்து ஒரு அடிக்கும் கீழே சென்றது. இதனால் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதன் காரணமாக சிறுவாணி குடிநீர் செல் லும் பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோ கம் செய்யப்பட்டது.


கனமழை பெய்தது


வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்திலேயே சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.


இந்த நிலையில் கடந்த 4-ந் தேதியில் இருந்து அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. 5-ந் தேதி இரவு அதிக பட்சமாக 122 மி.மீ. மழையளவு பதிவானது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வேகமாக அதிகரித்தது. இதன் காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.


10 அடியாக உயர்வு


அதைத்தொடர்ந்து 6-ந் தேதி இரவில் 112 மி.மீ., நேற்று முன் தினம் இரவில் 62 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப் படி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 62 மி.மீட்டர் மழையும், அடி வாரத்தில் 27 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.


அணையின் நீர்மட்டம் 10.27 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 5 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. அதில் கோவை மாநகர பகுதிக்கு 5 கோடியே 20 லட்சம் லிட்டரும், மீதமுள்ள தண்ணீர் வழியோர கிராமங்களுக் கும் வினியோகம் செய்யப்பட்டது.


3-வது வால்வை தொட்டது


இது குறித்து குடிநீர் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, சிறுவாணி அணையில் நீரேற்று நிலையத்தில் உள்ள 3-வது வால்வை தொட்டபடி தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது தொடர்ந்தால் அணை விரைவில் நிரம்பி விடும். அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.



Next Story