நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில், பட்டுக்கு பெயர் பெற்ற திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த பட்டு கூட்டுறவு சங்கத்தில் சுமார் 1,700 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தநிலையில் நேற்று திடீரென திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க முதல் மாடி மதிப்பீட்டு பிரிவு கூடத்தில் 50-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல சங்கங்கள் கலந்து கொண்டன. இதற்கு, சி.ஐ.டி.யு. ஒன்றிய குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். தரமான பாவுப்பட்டு ஜரிகை வழங்க வேண்டுவது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அவர்களிடம் சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். நெசவாளர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின்பேரில் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com