சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை


சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 23 May 2023 5:30 AM GMT (Updated: 23 May 2023 5:31 AM GMT)

அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது தொழிலாளியின் வீடு மீது புளிய மரம் வேரோடு சாய்ந்தது.

தர்மபுரி

அரூர்

அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது தொழிலாளியின் வீடு மீது புளிய மரம் வேரோடு சாய்ந்தது.

ஆலங்கட்டியுடன் மழை

தர்மபுரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதலே வெயில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனர். இந்த நிலையில் நேற்று அரூர், நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சூரநத்தம், சிட்லிங், ஏ.கே.தண்டா உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இந்த மழைக்கு சூரநத்தம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குமரன் என்பவரது வீட்டின் மீது புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் மீது மரம் விழுந்ததால் உள்ளே இருந்த பொருட்கள் உடைந்து சேதமானது.

கோரிக்கை

இதுகுறித்து வருவாய் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வீட்டின் மீது மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வீடு கட்டி தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.


Next Story