சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை


சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை
x

மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1.50கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story