குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை - பயணிகள் அதிர்ச்சி

குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை வெளியேறியது.
குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை - பயணிகள் அதிர்ச்சி
Published on

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டபுள் டெக்கர் ரெயிலின் சி-6 பெட்டியின் சக்கரத்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

புகை வெளியேறுவதை அறிந்த ரெயில் ஓட்டுநர் உடனே ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் பாதிப்பை சரிசெய்தனர். அதன் பின்னர் மீண்டும் ரெயில் பெங்களூருக்கு சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரெயிலில் புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com