ராணுவ வீரர் திடீர் சாவு

மானூர் அருகே ராணுவ வீரர் திடீரென இறந்தார்.
ராணுவ வீரர் திடீர் சாவு
Published on

மானூர்:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை - பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் இசக்கிதுரை மகன் செல்வகுமார் (வயது 28). இந்திய ராணுவ வீரராக அசாமில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலையில் தன் வீட்டின் படிக்கட்டில் நிலைதடுமாறி விழுந்தார். இதனால் தலையில் ஏற்பட்ட ஊமைக்காயத்தை பொருட்படுத்தாமல் கட்டிலில் படுத்துள்ளார். இரவில் அவரது தாயார் உச்சிமாகாளி எழுப்பிய போது செல்வகுமார் மூச்சு பேச்சின்றி இருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை உக்கிரன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com