5 வழக்குகளுக்கு தீர்வு
சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நீலகிரி
ஊட்டி
நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் நில பிரச்சினை மற்றும் மோட்டார் வாகன வழக்குகள் சமரசத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 5 வழக்குகள், ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் லிங்கம் மற்றும் சார்பு நீதிபதி ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story