அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக செயல்பட வேண்டும்- டி.ஆர் பாலு பேட்டி

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக செயல்பட வேண்டும்- டி.ஆர் பாலு பேட்டி
Published on

சென்னை,

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றி முதல் அமைச்சரின் நன்மதிப்பை டி.ஆர்.பி.ராஜா பெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com