100 எக்டேரில் சோயா சாகுபடி


100 எக்டேரில் சோயா சாகுபடி
x

கும்பகோணம் பகுதியில் 100 எக்டேரில் சோயா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று துணை வேளாண்மை அலுவலர் கூறினார்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

கும்பகோணம் பகுதியில் 100 எக்டேரில் சோயா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று துணை வேளாண்மை அலுவலர் கூறினார்.

விழிப்புணர்வு முகாம்

சோயா சாகுபடி மற்றும் நெல் தரிசில் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் சார்பில் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் கிராமத்தில் உளுந்து சாகுபடி விழிப்புணர்வு முகாம் ஊராட்சி தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயக்குனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணன் வரவேற்று பேசினார். வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி பேசினார். அப்போது அவர் சோயா பீன்சின் முக்கியத்துவம் அதன் பயன்கள், ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

மானியம்

நெல் சாகுபடிக்கு பிறகு சோயா சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மண் வளமும் மேம்படும். இந்த ஆண்டு கும்பகோணம் வட்டத்துக்கு சோயா சாகுபடி செய்ய 100 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் சோயா தொகுப்பு செயல் விளக்கத்துக்காக ஒரு ஹெக்டருக்கு ரூ.5000 மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு எக்ேடருக்கு டிரைக்கோ டிராமா விரிடி என்ற பூஞ்சான மருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

வேளாண்மை விரிவாக்க மையங்கள்

சோயா பீன்ஸ் விதைகள் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள சுவாமிமலை, கொத்தங்குடி, சோழபுரம், கும்பகோணம், கொற்கை, ஆகியவேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா விதைகள் வழங்கப்பட்டது.முகாமில் சோயா கள அலுவலர் வெங்கடாசலம், உதவி அலுவலர் விவேக், உதவி வேளாண்மை அலுவலர் கீர்த்திகா, முன்னோடி விவசாயி சந்திரசேகர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story