காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
Published on

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிகுழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ கடன் போன்ற திட்டங்களுக்கான கடன் வழங்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் போன்ற திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டங்களில் பின்வரும் தேதிகளில் நடைபெறவுள்ளது.

வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காஞ்சீபுரம் தாசில்தார் அலுவலகம், 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம், 27-ந்தேதி (புதன் கிழமை) ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார்அலுவலகம், 28-ந்தேதி (வியாழக்கிழமை) குன்றத்தூர் தாசில்தார் அலுவலகம், 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகம். எனவே, இந்த மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் விண்ணப்பதாரான் ஜாதி சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

கல்விக்கடனுக்கு செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் கடன் உதவி பெற்று பயனடையுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com