கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திருவாரூர்
திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது பால், சந்தனம், பன்னீர் மற்றும் திரவியப்பொடி அபிஷேகம் செய்யப்பட்டு வடைமாலை அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனைமுன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story