அமணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

அமணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
அமணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

நெகமம்

நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு நேற்று முன்தினம் தேய்பிறை பஞ்சமி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 7 மணிக்கு ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு வகையான அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமணீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com