பைரவருக்கு சிறப்பு பூஜை


பைரவருக்கு சிறப்பு பூஜை
x

பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலபைரவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தயிர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து காலபைரவருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story