சேலம் வழியாக செல்லும் பெங்களூரு-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்


சேலம் வழியாக செல்லும் பெங்களூரு-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 11 July 2023 6:48 PM GMT (Updated: 12 July 2023 11:09 AM GMT)

பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் மற்றும் வேளாங்கண்ணி -பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது

சேலம்

சூரமங்கலம்

பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் மற்றும் வேளாங்கண்ணி -பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெங்களூரு- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06547) பெங்களூருவில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி-பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) வேளாங்கண்ணியில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களுரு சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story