குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x

வருகிற 30-ம் தேதிவரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. இந்த சிறப்பு முகாமை சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; சென்னையில் 160 வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இன்னும் 3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு கூறினார்.


Next Story