விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு


விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு
x

கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 286 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூர்

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் ேநற்று விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதேேபால் கரூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

286 இடங்கள்

கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க., இந்துமுன்னணி, பொதுமக்கள் சார்பில் போலீசார் அனுமதியுடன் மொத்தம் 286 இடங்களில் சிங்கம், மாடு, மான், தாமரை, காளைகள் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, கொழுக்கட்டை, அவல், பொரி உள்ளிட்ட விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சிலைகள் அனைத்தும் ஒன்றாக முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

கரூர் சின்ன ஆண்டாங்கோவில், ஜவகர்பஜார், காந்திகிராமம் உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் உள்ள விநாயகா் ேகாவில்களில் ேநற்று சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்பட பல்ேவறு வாசனை ெபாருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் ெசய்தனா்.

குளித்தலை

குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி, பா.ஜ.க., இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதேபோல் விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதணை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல் மாலை சூட்டப்பட்டு, வீட்டில் செய்த கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பொருட்கள் வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் குளித்தலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நொய்யல்

நொய்யல் பகுதியில் கூலக்கவுண்டனூர், கந்தம்பாளையம், புன்னம்சத்திரம், அய்யம்பாளையம், நொய்யல், மரவாபாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாளை காலை அனைத்து சிலைகளும் புகழிமலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்க உள்ளனர். இதையொட்டி சிலைகள் முன்பு அரவக்குறிச்சி உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் உள்பட 21 வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், காகிதபுரம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலாயுதம்பாளையம் கடைவீதி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

தோகைமலை வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூைஜ நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தோகைமலை

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் சிலைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நேற்று தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.


Next Story