பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
x
தினத்தந்தி 10 July 2023 7:30 PM GMT (Updated: 10 July 2023 7:30 PM GMT)

பழனி அருங்காட்சியகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

திண்டுக்கல்

பழனி அரசு அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், பழனி அருங்காட்சியகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய தொண்டு, மக்கள் தலைவர் காமராஜர், காமராஜரின் சமுதாய பற்று ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது.

9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுதந்திரத்துக்கு முன்-பின் தமிழக கல்வி நிலை, உயர்கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சி, கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே பங்குபெற அனுமதி உண்டு. பங்குபெறும் மாணவர்கள் பள்ளியின் மூலம் பெயர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசியாகும். போட்டியானது 17-ந்தேதி நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story