வட்டமலைக்கரை ஓடையில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்


வட்டமலைக்கரை ஓடையில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்
x
தினத்தந்தி 11 July 2023 5:27 PM IST (Updated: 12 July 2023 5:15 PM IST)
t-max-icont-min-icon

வட்டமலைக்கரை ஓடையின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கும் கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

வட்டமலைக்கரை ஓடை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம், புத்தரச்சல், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகக் கொண்டு இடையபட்டி, நிழலி, வட்டமலை வழியாக வெள்ளகோவில் அருகேயுள்ள நாகமநாயக்கன்பட்டி வட்டமலைக்கரை அணையில் முடிவடைவது வட்டமலைக்கரை ஓடையாகும்.

இது புத்தரச்சல், குண்டடம் பகுதியில் நிழலிக்கரை ஓடை எனவும், காங்கயம் பகுதியில் வட்டமலைக்கரை ஓடை எனவும் அழைக்கப்படுகிறது.

கருவேல மரங்கள்

இந்த ஓடையின் பாதையில் ஆங்காங்கே குளங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்படுவதால் இந்த ஓடையின் பாதையின் அருகில் உள்ள கிணறு, போர்வெல்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் ஓடையின் பாதையில் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்து நிற்பதால் தண்ணீரின் போக்கை தடுப்பதாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகமாக உறிஞ்சி விடுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வேருடன் அகற்ற கோரிக்கை

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஓடையை முழுமையாக குழு அமைத்து ஆய்வு செய்து கருவேல மரமுற்புதர்களை முழுமையாக வேருடன் பிடுங்கி அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், ஓடையின் கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story