கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி


கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.

முதல்-அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் குமரி மாவட்ட பிரிவின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி முடிவடைகிறது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. அனைத்து பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான தடகள போட்டி நேற்று நடந்தது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 மாணவர்கள் பங்கேற்றனர்.

100 மீட்டர் ஓட்டப்போட்டியில் லயோலா கல்லூரி மாணவர் கிட்சன் தர்மா முதல் பரிசையும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் லயோலா கல்லூரி மாணவர் மைக்கேல் திவான், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்து கல்லூரி மாணவர் ஆஸ்கா் சிஜோ, 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்ட போட்டிகளில் ஸ்காட் கல்லூரி மாணவர் ஜெபின் ஆகியோரும் முதல் பரிசை பெற்றனர்.

பொதுப்பிரிவினர்...

இதேபோல குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டிகளில் டி.ஜி.வைஸ்னவ் கல்லூரி மாணவர் சிதீஸ்வரன் முதல் இடத்தையும், உயரம் தாண்டுதலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர் அபினேஷ், நீளம் தாண்டுதலில் இந்து கல்லூரி மாணவர் அசதுல்லா மஜாகித் ஆகியோரும் முதல் பரிசை வென்றனர். நாளை (திங்கட்கிழமை) பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது.


Next Story