மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி


மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
x

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூரில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி 2-ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் கூடைபந்து போட்டியில் மேவ்ரிக்ஸ், ரேப்டர்ஸ், டெவில்ஸ், ஸ்டோம் பிரேக்கர்ஸ் என 4 அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் ரேப்டர்ஸ் அணியும், மேவ் ரிக்ஸ் அணியும் மோதினர். இதில் ரேப்டர்ஸ் அணி 17 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மேவ்ரிக்ஸ் 9 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும் பெற்றனர். 3 மற்றும் 4-ம் இடத்திற்கான போட்டியில் டெவில்ஸ் அணி 14 பள்ளிகள் பெற்று 3-ம் இடத்தையும், 6 புள்ளிகள் பெற்று ஸ்டோம் பிரேக்கர்ஸ் 4-ம் இடத்தை பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் கொளஞ்சிநாதன், ரமேஷ் கண்ணா ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளை மருத்துவர் பரத் தொடங்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக தினேஷ்குமார், பார்த்தீபன் மற்றும் நூர்தீன்ராஜ் ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது.


Next Story