கமுதி பள்ளியில் விளையாட்டு விழா- 200 மாணவிகள் பங்கேற்பு


கமுதி பள்ளியில் விளையாட்டு விழா- 200 மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Sept 2023 10:43 AM IST (Updated: 7 Sept 2023 11:14 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட ஏராளமான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்தனர்.

ராமநாதபுரம்

கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு உறவின்முறை முறைகாரர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். அம்பலகாரர் சக்திவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். பள்ளியின் செயலர் சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி உள்பட ஏராளமான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று சாதனைகள் படைத்தனர்.

விழாவில் பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர் ஜெகன் உள்பட நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியைகள் திருவளர்ச்செல்வி, மீனு பிரியங்கா மற்றும் ஆசிரியைகள் விளையாட்டுப் போட்டியை கண்காணித்து நடத்தினர்.

இதே போல் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கமுதி குறு வட்டார அளவிலான போட்டியில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story