குடிநீர் குழாயில் இறந்து அழுகிய நிலையில் இருந்த அணில்... பொதுமக்கள் அதிர்ச்சி


குடிநீர் குழாயில் இறந்து அழுகிய நிலையில் இருந்த அணில்... பொதுமக்கள் அதிர்ச்சி
x

சேலத்தில் பொது குடிநீர் குழாயில் இறந்து அழுகிய நிலையில் இருந்த அணிலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம்,

சேலம் ஆத்தூர் கொத்தம்பாடி பெரியார் நகர் பகுதியில் மேட்டூர் கூட்டுக் குடிநீர்திட்டத்தின் பொது குடிநீர் குழாயில் இறந்து அழுகிய நிலையில் இருந்த அணிலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2 குழாய்களில் குடிநீர் வராததால் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட போது, அணில் இறந்து அழுகிய நிலையில் குழாய் வழியே வந்து விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story