ஸ்ரீபாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்


ஸ்ரீபாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்
x

ஸ்ரீபாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் ஸ்ரீபாலமுருகன் மூலவர், ஸ்ரீராஜகணபதி மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் நிறைவுற்று, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணி முதல் 10.15 வரை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி, சுதர்சன ஹோமங்கள், கோபூஜை, அதனைத்தொடர்ந்து அன்று மாலை வாஸ்து பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 2-ம்கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம்கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

இன்று காலை 5 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. காலை 8.45 மணிக்கு யாசாலையில் இருந்து புனிதநீருடன் கடங்கள் புறப்பாடும், காலை 9.15 மணி முதல் 10 மணி வரை கோபுர விமான மகா கும்பாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பிரசாத வினியோகமும் நடக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா விமரிசையாக நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மகா அன்னதானம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா மற்றும் மகா அன்னதான ஏற்பாடுகளை ஸ்ரீபாலமுருகன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story