எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை 1,440 பேர் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை 1,440 பேர் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை 1,440 பேர் எழுதினர்
Published on

விழுப்புரம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு துணைத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும் என 11 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது. நேற்று நடந்த தமிழ் தேர்வை எழுத 1,164 மாணவர்களும், 453 மாணவிகளும் என மொத்தம் 1,617 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 1,053 மாணவர்களும், 387 மாணவிகளும் என மொத்தம் 1,440 பேர் கலந்துகொண்டு துணைத்தேர்வை எழுதினர். 177 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com