மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி


மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 6:46 PM GMT)

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் லீக் போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. இன்று(புதன்கிழமை) முதல் 14-ந்தேதி வரை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மைதானம் மற்றும் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வேலூர், தென்காசி, திருப்பூர், ராமநாதபுரம் மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதன்படி இன்று திருப்பூர் மற்றும் தென்காசி அணிகளுக்கு இடையேயான போட்டி செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியிலும், ராமநாதபுரம் மற்றும் வேலூர் அணிகளுக்கு இடையேயான போட்டி சீதக்காதி விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.

நாளை (வியாழக்கிழமை) திருப்பூர் மற்றும் வேலூர் அணிக்கும், தென்காசி மற்றும் ராமநாதபுரம் அணிக்கும், 14-ந்தேதி தென்காசி மற்றும் வேலூர் அணிக்கும், திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் அணிகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் செய்து வருகிறது.


Next Story