கோடை கால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை - தமிழக மின்சார வாரியம் தகவல்


கோடை கால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை - தமிழக மின்சார வாரியம் தகவல்
x

கோடை கால மின்தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கோடை கால மின்தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை கால தமிழகத்தின் தினசரி மின் தேவை 18,500 மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கோடை காலத்தில் தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களில் மொத்தம் 7.99 லட்சம் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய 1562 மெகாவாட் மின்சாரம் பெற தனியாருடன் குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தில் மின்பற்றாக்குறையை ஈடுகட்ட மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு எட்டு ரூபாய் 50 காசுகள் என பெற டெண்டர் இறுதிசெய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு எட்டு ரூபாய் 50 காசுகள் பெற டெண்டர் இறுதிச் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 1,312 கோடி ரூபாய் சேமிப்பு கிடைக்கப்பெறும் என்றும்கூறப்பட்டுள்ளது. மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story