எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை


எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை
x

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

எலி மருந்து

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: எலிமருந்து தமிழக அரசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எலிகளை கொல்ல பயன்படுத்தும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்துக்கு தடை விதித்து உள்ளது. அங்கீகாரம் பெறாத இந்த எலி பேஸ்ட் மருந்துகளுக்கு எதிர்வினை மருந்துகள் எதுவும் இல்லாததால் மத்திய மாநில அரசுகள் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதித்து உள்ளது.

நிரந்தர தடை

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் என்ற எலி மருந்து மளிகை கடைகளில் பல் பொருள் அங்காடிகள், மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு தமிழக அரசால் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு காரணத்துக்காகவும் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்படுத்த வேண்டாம்.

நடவடிக்கை

ஆய்வின் போது இந்த எலி மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது பூச்சி மருந்து தடுப்பு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story