மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்:5 பேருக்கு காவல் நீட்டிப்பு


மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்:5 பேருக்கு காவல் நீட்டிப்பு
x

மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்:5 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் முன்னாள் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி சிகாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 பேரும் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்காக 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத், 5 பேர் மீதான விசாரணையை வரும் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிகாமணி தவிர மற்ற 4 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story