தற்கொலை சம்பவங்களை தடுக்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்


தற்கொலை சம்பவங்களை தடுக்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:51 AM IST (Updated: 22 Dec 2022 3:04 PM IST)
t-max-icont-min-icon

தற்கொலை சம்பவங்களை தடுக்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வகுப்புகள் அவசியம் நடத்த வேண்டும். உச்சகட்ட மன அழுத்தமே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம். மாணவர்களின் தற்கொலைக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இருந்தபோதிலும் அவற்றை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தற்கொலை செய்யும் மாணவர்கள் ஒரு விதமான உச்சகட்ட மன நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இத்தகைய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர் மூலம் வழிகாட்டுதலும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எண்ணங்களை சரி செய்வதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்டவை அளிக்க வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை வளர்த்து விட்டால் தற்கொலை எண்ணத்தில் இருந்து மாணவர்களை காப்பாற்ற முடியும்.


Next Story