குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் மரத்தடியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள்


குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் மரத்தடியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள்
x

குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் மரத்தடியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள்

நாகப்பட்டினம்

சிக்கல்:

போதிய கட்டிட வசதி இல்லாததால் குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியின் மரத்தடியில் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருக்கத்தி அரசு பள்ளி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் அத்திப்புலியூர், குருமணாங்குடி, நீலப்பாடி, கூத்தூர், செருநல்லூர், ஆத்தூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 31 மாணவ-மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தற்போது போதிய கட்டிட வசதிகள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் படிக்க முடியாத நிலை உள்ளது.

மரத்தடியில் பாடம் நடத்தி வரும் அவலம்

கடந்த 3 ஆண்டுகளாக பள்ளியில் உள்ள கட்டிடங்களின் வகுப்பு அறைகளில் உள்ள மேற்கூரைகளின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

இந்தநிலையில் பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவ-மாணவிகளை அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு படித்து வருகின்றனர்.

கூடுதல் வகுப்பறைகள்

எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி போதிய கட்டிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story