ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 9:31 AM GMT)

படுக்கப்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கப்பத்து உள்ளிட்ட 8 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு தினமும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டிட வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் கட்டிடம் அமைப்பதற்கான நிதி உதவி தரும் அமைப்பான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் உயர் அதிகாரி ராம் பிரசாத் நேரில் பார்வையிட்டார். அவரிடம் கூடுதலாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற வசதிகள் செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆய்வின் போது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி, படுக்கப்பத்து மருத்துவ அலுவலர் லட்சுமி, திட்ட மேலாளர் பத்மநாபன், தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் உடன் இருந்தனர். படுக்கப்பத்து பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி சரவணன் வரவேற்று கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், சுகாதார ஆய்வாளர்கள் மந்திர ராஜன், கிறிஸ்டோபர் செல்வதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story