பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கான ஆய்வு
கே.வி.குப்பம் தாலுகாவில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கான ஆய்வு நடைபெற்றது.
கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள காவனூர் ஊராட்சி பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் பயிர் செய்திருக்கும் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் காவனூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் நித்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் வ.ராஜன், மு.பற்குணன், காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு உள்பட பலர் கலந்துகொண்டு வயல்களில் இறங்கி ஆய்வு செய்தனர்.
உரிய விளைச்சல் கிடைக்காத பயனாளிகளுக்கு அவர்களின் இழப்பை ஈடுசெய்யும் வகையில் இந்த காப்பீடு அந்த விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். தற்போது புதிதாக இம்மாதம் முதல், வரும் ஜனவரி 31-ந் தேதி வரை பயிர்செய்யும் விவசாயிகள் இந்த பருவத்திற்கான பயிர் காப்பீடுகளை வரும் ஜனவரி 31-ந் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.