கரும்பு விவசாயிகளுக்கு மானியம்


கரும்பு விவசாயிகளுக்கு மானியம்
x

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை மூலம் கரும்பு விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பிற்கு தமிழகத்திலேயே அதிகவிலை கொடுக்கும் ஆலையாக கடந்த 46 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசால் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகை அங்கத்தினர்கள் சப்ளைசெய்யும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகை, சொட்டு நீர் பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் வல்லுனர் விதை கரும்பை கொண்டு நாற்றங்கால் நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கும், பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

களை எடுத்தல், மண் அணைத்தல் மற்றும் கரும்பு அறுவடை போன்ற பணிகளை மினி டிராக்டர், பவர் டில்லர் மற்றும் அறுவடை எந்திரம் மூலம் செய்ய முடியும் என்பதால் சாகுபடிசெலவு பாதியாக குறையும்.

அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது சோகை தூள் ஆக்கப்படுவதோடு, களைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

எனவே, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பல்வேறு மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்து பயனடையலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story