புழல் பெண்கள் ஜெயிலில் வெளிநாட்டு கைதிகள் திடீர் மோதல் - படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை


புழல் பெண்கள் ஜெயிலில் வெளிநாட்டு கைதிகள் திடீர் மோதல் - படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை
x

புழல் பெண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் வெளிநாட்டு கைதிகளுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

சென்னை

புழல் பெண்கள் ஜெயிலில் பல்வேறு வழக்குகளில் கைதாகி 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் கைதான வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா (வயது 30). தென்ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த லிசி (35), ஸ்டெல்லா (36) ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த 3 கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீர் கைகலப்பாக மாறியது. இதில் மோனிகா ஸ்டெல்லா இருவரும் சேர்ந்து லிசியை பலமாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் லிசிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த சிறைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து உடனே லிசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லிசி அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து எதற்காக லிசி தாக்கப்பட்டார்? எந்த ஆயுதங்களை கொண்டு லிசியை தாக்கினர் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story