தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x

வேலூரில் தொழிலாளி திடீரென இறந்தார்.

வேலூர்

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 32), இவர் அந்த பகுதியில் உள்ள இரும்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை.

அமானுல்லா வேலை முடிந்து வீட்டிற்கு செல்லாமல் பழைய பைபாஸ் சாலையில் உள்ள காம்பளக்ஸ் மாடிப்படியின் அடியில் படுத்து தூங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவர் மாடிப்படியின் அடியில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் போலீசார் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அமானுல்லாவின் சகோதரி சனா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story