தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்


தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 4:06 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தேங்கும் குப்பைகளை அள்ளும் துப்புரவு பணியில் ஈடுபட நகராட்சி நிர்வாகம் சார்பில் 71 தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் நேற்று காலை நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கூடி திடீரென போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கினால் தான் துப்புரவு பணிக்கு செல்வோம் எனக்கூறி கோஷம் எழுப்பினர். அவர்களிடம் நகராட்சி என்ஜினீயர் ஜெயமாலதி, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகராட்சி தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்தால், நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடந்ததை காண முடிந்தது. இந்த விஷயத்தில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story