டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை

ஓசூர்:
சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள பி.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38), டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் திருமணமும் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், பி.குருபரப்பள்ளியில், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சூளகிரி அருகே தோரிப்பள்ளி அருகே உள்ள கொரகுறுக்கியை சேர்ந்தவர் ராமசாமி (40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மன உளைச்சலில் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






