கடலூர் சில்வர் பீச்சில் தூய்மை பணி


கடலூர் சில்வர் பீச்சில் தூய்மை பணி
x

கடலூர் சில்வர் பீச்சில் தூய்மை பணியை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் சென்னை பி.எம்.எப். பவுண்டேஷன் சார்பில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை பணி நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, போலீசார், தன்னார்வலர்களுடன் சேர்ந்து சில்வர் பீச்சில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சில்வர் பீச் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான கடற்கரையாக இருக்க வேண்டி தூய்மை பணி நடந்தது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பி.எம்.எப். பவுண்டேஷன் நிறுவன தலைவர் பி.எம்.எப். ஹம்ஜா மரைக்காயர் வரவேற்றார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார், மைக்கேல் இருதயராஜ், மகேஸ்வரி, அருட்செல்வன் மற்றும் போலீசார், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சான்றிதழ் வழங்கினார்.


Next Story