பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை; 2 பேர் கைது


பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 1:15 AM IST (Updated: 10 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மத்திய சிறையில் பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை மிரட்டிய 2 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை மிரட்டிய 2 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கோவை மத்திய சிறை


கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் கைதிகள் பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் ஆகியவற்றை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால்அவற்றை மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்களா? என சிறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.


மத்திய சிறையில் கைதிகளை பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள், உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது போலீசாரின் பாதுகாப்புடன் உறவினர்கள் கைதிக ளுடன் பேசுவதற்கும், உணவு பண்டங்களை கொடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.


கைதிகளிடம் சோதனை


இதேபோல், நேற்று முன்தினமும் கைதிகளை பார்க்க பார்வை யாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது 2 பேர் சிறையில் உணவு பொருட்களில் கஞ்சாவை மறைத்து வைத்து கைதிக்கு கொடுப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.


அதன் பேரில், சிறை அதிகாரி சிவராஜன் தலைமையில் சிறைக் காவலர்கள் கைதிகள் சிலரிடம் பார்வையாளர்கள் கொடுத்த உணவு பண்டங்களை வாங்கி சோதனை செய்தனர். இதில், சிறையில் தண்டனை கைதிகளாக உள்ள முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் சோதனை செய்யப்பட்டது.


b


அப்போது அவர்களிடம் இருந்த பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் 4 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து 2 பேர் சப்ளை செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்களிடம் சிறைத்துறையினர் விசாரித் தனர். உடனே அவர்கள் 2 பேரும் சிறைத்துறை போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் கஞ்சாவை பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கொடுத்தது, அவர்களை பார்க்க வந்த சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்த சேதுராமன், சூர்யபிரகாஷ் என்பது தெரியவந்தது.


2 பேர் மீது வழக்கு


இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், கைதிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து சப்ளை செய்த சேதுராமன், சூர்யபிரகாஷ் மற்றும் கைதிகள் முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகிய 4 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேதுராமன், சூர்யபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



Next Story