2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்


2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
x

2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலூர்

வேலூர்

காட்பாடி கசம் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருணம் நடைபெற இருப்பதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன் அலுவலர்கள் சரவணன், நாகப்பன், சமூகநலத்துறை ஊழியர்கள், திருவலம் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ள 15 வயது சிறுமிக்கும் அந்த பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமண நடைபெற இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் மாணவியின் பெற்றோரிடம் பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கினார். தொடர்ந்து மாணவியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்து, பின்னர் வேலூர் அரசினர் பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள உடையராஜாபாளையத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்துள்ள 16 வயது மாணவிக்கு சென்னையை சேர்ந்த 23 வயது வாலிபருடன் நடைபெற இருந்த திருமணமும் சைல்டுலைன், சமூகநலத்துறை அலுவலர்கள் மற்றும் ஆம்பூர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.


Next Story