

கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமுதா, அன்புக்கரசு மற்றும் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு 3 விதமான வாள் சண்டை பயிற்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, தசக்குமார், ஆசிரியர்கள் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.