பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து தாசில்தார் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டில் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அங்காளம்மன் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தரிசு நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சங்கராபுரம் தாசில்தார் சரவணன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சேகர், மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அங்காளம்மன் நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பட்டா கேட்டு மனு கொடுத்தவர்களின் வீடுகள் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story