தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா. விருது: முதல்-அமைச்சர் பாராட்டு

தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா. அமைப்பின் விருது வழங்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா. விருது: முதல்-அமைச்சர் பாராட்டு
Published on

சென்னை,

ஐ.நா சபையின் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு விருது, தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் நடந்த உலக முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில், இதற்கான விருதை, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷ்ணு பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புதுப்பித்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு 'முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023'-ஐப் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி (Guidance TN) நிறுவனத்திற்கு என் பாராட்டுகள்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவை பசுமையான எதிர்காலத்துக்கான நமது திராவிட மாடல் அரசின் உறுதியான ஈடுபாட்டைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. இந்தப் பெருமைமிகு மைல்கல்லை அடைந்ததற்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு ஐ.ஏ.எஸ் மற்றும் கடுமையாக உழைத்து வரும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com