தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.9 கோடி கையாடல் - துணை மேலாளர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.9 கோடி மோசடி நடைபெற்ற புகாரில், துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ. 9 கோடி கையாடல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
அந்த வகையில், துணை மேலாளர் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தனர். அப்போது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளராக இருந்த சைமன் சாக்கோ 2020-ல் காலமானார், அவரின் கையெழுத்தை போட்டு ஆனந்தன், ஹரிஹரன் பண மோசடி செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் துணை மேலாளர் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story