தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்வு - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்வு - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 20 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

2022-23ம் ஆண்டுக்கான நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள்ளது. நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது' என்றார்.

2021-22 ம் ஆண்டு நிதியாண்டில் 7.92 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23ம் நிதியாண்டில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது.

இந்தியாவில் தனிநபர் வருமானம் சராசரி 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com