டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தி முனையில் ரூ.5 ஆயிரம் கொள்ளை


டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தி முனையில் ரூ.5 ஆயிரம் கொள்ளை
x

டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தி முனையில் ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 55). இவர் சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் காசாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4-ந்தேதி இரவு 7 மணியளவில் பாரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், கத்தி முனையில் முருகதாசின் சட்டைப்பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணத்தை கொள்ளையடித்து சென்றது, சிந்தாமணி பகுதியை சேர்ந்த வரதராஜன் (25) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு கத்தி மற்றும் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story