பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக கொடுத்தனர். பல்லடம் அருகே நாரணாபுரம் மாதம்புதூர் ஸ்டாலின் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல்லடம் ரோட்டில் இருந்து நாரணாபுரம் சேடபாளையம் ரோடு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடை திறப்பதற்கு முன்பே, பாரில் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கி சாலையோரம் அமர்ந்து குடிப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பெண்கள் வேலைக்கு செல்லவும் பயமாக உள்ளது.
கடையை மூட வேண்டும்
ஓடை புறம்பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.போக்கு இடத்தில் கடை அமைந்துள்ளதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு அருகே மீன்கடை, சில்லிக்கடை, தள்ளுவண்டி உணவகம் அமைப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடையை அருகில் மாற்றும் முயற்சியும் நடக்கிறது. அப்படி மாற்றினாலும் பிரச்சினை அதிகரிக்கும். இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை மூட வேண்டும். எங்கள் பகுதியில் வசிப்பவர்களின் ஆதார் கார்டு நகல் அனைத்தையும் மனுவுடன் இணைத்துள்ளோம். கடையை மூடவில்லையென்றால் ஆதார் கார்டை சமர்ப்பிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என்று கூறியுள்ளனர்.