ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு


ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
x
தினத்தந்தி 14 July 2023 12:30 AM IST (Updated: 14 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 1½ மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.

கோயம்புத்தூர்
பீளமேடு


கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 1½ மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.


ஷார்ஜா விமானம்


கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக் கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன.


அதன்படி ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஷார்ஜாவில் இருந்து 175 பயணிகளுடன் விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.


என்ஜினில் கோளாறு


இதைத் தொடர்ந்து கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு அதே விமானம் நேற்று காலை 7 மணியளவில் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 175 பயணிகள் ஷார்ஜாவுக்கு செல்ல தயாராக இருந்தனர்.


விமானம் ஓடுபாதைக்கு சென்ற போது என்ஜினில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக சுதாரித்துக் கொண்டு ஓடு பாதையில் விமானத்தை நிறுத்தினார். இது பற்றி அவர், விமானநிலைய தொழில்நுட்ப பிரிவுக்கு தகவல் கொடுத்தார்.


175 பயணிகள் உயிர் தப்பினர்


இதற்கிடையே விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். அதன்பிறகு விமான நிலைய பொறியாளர்கள் விரைந்து சென்று, விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் விமானத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர்.


இதனால் கோவையில் இருந்து 1½ மணி நேரம் தாமதமாக ஷார்ஜாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை அறிந்து உடனே நிறுத்தியதால் 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story