இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தற்கொலை
Published on

சிவகாசி, 

சிவகாசி சிவன் கோவில் நந்தவனத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் செல்வசுபத்ரா (வயது20) என்பவருக்கும், செலங்கமலப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் அய்யனார் என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அய்யனார், செல்வசுபத்ரா கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அய்யனார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இதனால் அடிக்கடி வெளியூர் செல்லும் போது செல்வசுபத்ராவுக்கும், மாமனார், மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வசுபத்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வசுபத்ராவின் தாய் மகாலட்சுமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com