கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் கைது

கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் 450 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், அவர் கணபதி சுந்தர நாச்சியாபுரம் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 31) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





